/tamil-ie/media/media_files/uploads/2022/01/dhanush-aishwarya.jpg)
நடிகர் தனுஷ் – இயக்குனர் ஐஸ்வர்யா விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களது 20 ஆண்டு கால திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் ட்விட்டர் பக்கத்தில் தாங்கள் பிரிந்துள்ளதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சி செய்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.