scorecardresearch

ஒரே ஹோட்டலில் தனுஷ்- ஐஸ்வர்யா; வலைதளங்களில் வைரல் போட்டோ

Tamil Cinema News : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்துக்கு பின் ஒரு ஹோட்டலில் தங்கியள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒரே ஹோட்டலில் தனுஷ்- ஐஸ்வர்யா; வலைதளங்களில் வைரல் போட்டோ

Dhanush Aishwarya Stay In Same Hotel In Hyderabad : கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானா தனுஷ் கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமண பந்தத்தில் 18 வருடங்களை கடந்த இந்த தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக கூட்டாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்பாடுத்திய நிலையில்,  தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

பதினெட்டு வருடங்கள் நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இருந்தோம். இந்த சமயத்தில் பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் தழுவல் ஆகியனவாகவே இருந்தது. இன்று நாங்கள் எங்களது பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.

மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு கொடுங்கள். ஓம் நமசிவாய! அன்பைப் பரப்புங்கள், டி” என்று தனுஷ் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருமண பந்தத்தை முறித்துககொள்வதாக அறிவித்த சில நாட்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் இருவரும் தங்களது படங்கள் தொடர்பான பணிகளுக்காக தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் தனுஷ் தனது படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ளார்.

அதே சமயம் தான் இயக்க இருக்கும் ஒரு பாடலுக்காக தனது படப்பிடிப்பு குழுவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதே ஹோட்டலில் ஆலோசனையில் உள்ளார். பாடல் குறித்த ஆலோசனையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா தனது குழுவுடன் இணைந்து ஆலோசனை செய்வது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவின் திருமண முறிவு குறித்து தனுஷின் அப்பா இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறுகையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகவே பிரிந்துள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் குடும்ப சண்டை வெளிப்படையாக தெரிந்துள்ளது. இது விவாகரத்து அல்ல, தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது ஹைதராபாத்தில் உள்ளனர். இருவரிடமும் தொலைபேசியில் பேசி சில அறிவரைகளை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhanush and aishwarya staying same hotel after divorce for shooting work