நடிகர் தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை சென்னையில் ஒரே திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தனர்.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினியின் மனைவி லதா ஆகியோர் முதல் நாள் முதல் காட்சி ஒரே திரையரங்கில் படம் பார்த்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா மற்றும் ரஜினிகாந்த்தின் குடும்பத்தினர் சென்னையில் உள்ள ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸில் வேட்டையன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவருடைய சகோதரி சௌந்தர்யா, தாய் லதா மற்றும் ஐஸ்வரியாவின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்குக்கு ரஜினியின் வேட்டையன் திரைப்படம் பார்க்க வந்தார். அதே நேரத்தில், நடிகர் தனுஷ் வேட்டையன் படத்தைப் பார்க்க ரோகினி திரையரங்குக்கு வந்தார். இருவரும் தனித் தனியாக படம் பார்க்க வந்திருந்தாலும், முதல் நாள், முதல் காட்சி ஒரே திரையரங்கில் படம் பார்த்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்ப்பாக பேசப்படுகிறது.
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தைப் பார்க்கச் செல்வதற்கு முன், வியாழக்கிழமை காலை, “வேட்டையன் தினம்!” என்று எக்ஸ் பகத்தில் பதிவிட்டார். “சூப்பர் ஸ்டார்... தலைவர் தரிசனம்.” வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், அபிராமி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் 2004-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார், “18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என ஒருவருக்கொருவர் ஒன்றாக இருந்தோம்.. பயணம் வளர்ச்சி, புரிதல், சரிசெய்தல் மற்றும் மாற்றியமைத்தல்...இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், எங்களை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.” என்று அறிவித்தனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவர்ம் மனு தாக்கல் செய்தனர்.
அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஆஜராகவில்லை. இரு தரப்பினரும் தங்கள் வாக்குமூலத்தை சமர்பிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை அக்டோபர் 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த பிப்ரவரி மாதம், ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் வெளியாவதற்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது, மீண்டும் சேர்ந்து வாழ உள்ளதாக செய்திகள் வெளியானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“