/indian-express-tamil/media/media_files/B4liyL51bSFsYOtUUT4G.jpg)
தனுஷ் - ராஷ்மிகா மந்தனா
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் செட்களில் இருந்து தனுஷ் – ராஷ்மிகா மந்தனா தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் குபேரா. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்க : Dhanush and Rashmika Mandanna spotted on the sets of Kubera in Mumbai. Watch
இதனிடையே மும்பையில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் செட்களில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் செட்களுக்கு தங்கள் காவலர்களுடன் நடந்து செல்கின்றனர். தனுஷ் செமி கேஷுவல் சூட் அணிந்தும், ராஷ்மிகா பச்சை நிற சுரிதார் அணிந்திருக்கிறாது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் வழக்கமான கெட்டப்பில் இருப்பார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் குபேரனின் கதை என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், படத்தில் தனுஷின் தோற்றம் மற்றும் படத்தின் டைட்டில் ஆகியவற்றைக் கொண்டு, இது ஒரு பணக்காரர் மற்றும் அவரது வீழ்ச்சியைப் பற்றிய கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்துள்ளனர். முன்னதாக, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்றது.
#Kubera shooting spot✨#Dhanush - #RashmikaMandanna 🫶❤️pic.twitter.com/teKXaFjjXN
— AmuthaBharathi (@CinemaWithAB) April 25, 2024
அங்கு சண்டைக்காட்சியின் போது தனுஷ் பிச்சைக்காரனாக காணப்பட்டார். மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் படக்குழுவும் சிக்கல்களை எதிர்கொண்டது, இதனால் படத்தின் படப்பிடிப்பை கைவிட்டு படக்குழு மும்பையில் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறது. குபேரா தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகி வரும் நிலையில், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும்.
இதனிடையே தனுஷ் தான் இயக்கி நடித்துள்ள தனது 50-வது திரைப்படமாக ராயன் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். வட சென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையான இந்த படத்தில் டைட்டில் ரோலில் தனுஷ் நடித்துள்ளார். அதேபோல் இயக்குனராக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ்,அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.