/tamil-ie/media/media_files/uploads/2019/06/Dhanush-Asuran-Movie.jpg)
'வட சென்னை’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் வெற்றி மாறனின் ’அசுரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் தனுஷ்.
வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து, மதுரையை கதைகளமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தந்தை இரண்டு மகன்கள் என மொத்தம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
’அசுரன்’ படத்திற்கு இசை, ஜி.வி.பிரகாஷ். ஆடுகளம் படத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. சில கருத்து வேறுபாடுகளால் தனுஷ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. பின்னர் நடிகராகிவிட்ட ஜி.வி-யால் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க முடியாமல் போனது.
#asuransongupdate#asuran@dhanushkraja ,ken , tee jay sing a song together in yugabarathis lyrics ... a peppy trk on way for @VetriMaaran@theVcreations ???????????? pic.twitter.com/wSVycMqCZf
— G.V.Prakash Kumar (@gvprakash) 24 June 2019
இதற்கிடையே மீண்டும் இணைந்திருக்கும் கூட்டணியால் மகிழ்ச்சி கொண்டனர் ரசிகர்கள். அசுரன் பட பாடல்களைப் பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் அப்டேட் செய்வார் ஜி.வி.பிரகாஷ்.
இந்நிலையில், ‘பொல்லாத பூமி’ என்ற பாடலை அசுரன் படத்தில் தனுஷ் பாடியிருக்கிறாராம். இதனை யுகபாரதி எழுதியிருக்கிறார். இந்தத் தகவலையும், பாடல் பதிவின் போது எடுத்துக் கொண்ட படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.