அசுரன் செகண்ட் லுக் போஸ்டர்: வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ்!

Dhanush’s Asuran 2nd look poster: எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது.

dhanush asuran 2nd look poster
தனுஷின் அசுரன் செகண்ட் லுக் போஸ்டர்

Asuran 2nd Look Poster: ’பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை’ ஆகியப் படங்களுக்குப் பிறகு, 4-வது முறையாக ‘அசுரன்’ படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணி இணைந்திருக்கிறது.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பவன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்


’பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன’ ஆகியப் படங்களுக்குப் பிறகு 4-வது முறையாக தனுஷின் படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ’அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அதன் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள 2 போஸ்டர்களில் ஒன்றில் தனித்துவமான ’ரெட்ரோ’ லுக்கும், மற்றொன்றில் கோபமாகவும் காட்சியளிக்கிறார் தனுஷ். இதைப் பார்த்த ரசிகர்களுக்கு புல்லரித்துப் போயிருக்கிறது. அதோடு விரைவில் இதன் ட்ரைலரும், பாடல்களும் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhanush asuran second look poster vetrimaaran

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com