/tamil-ie/media/media_files/uploads/2020/07/Karnan-Title-Look-Poster-released.jpg)
கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர்
Dhanush Birthday: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம். இதனை ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை ராஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் தனது 37-வது பிறந்தநாள் இன்று கொண்டாடுவதால், ’கர்ணன்’ படத்தின் டைட்டில் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் HAPPY BIRTHDAY @dhanushkraja sir????Karnan Title Look????@theVcreations@Music_Santhosh@thenieswar@EditorSelva@RamalingamTha@rajisha_vijayan#HappyBirthdayDhanush#KarnanTitleLook Experience the beats of ‘RAJA MELAM’????5.55 pm pic.twitter.com/xgSjC6itTS
— Mari Selvaraj (@mari_selvaraj) July 28, 2020
படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் ஏராளமான மக்கள் சேர்ந்து வாள் பிடித்திருக்கிறார்கள். “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன்” என வாழ்த்தி படத்தின் டைட்டில் லுக்கை பதிவிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். இதனையடுத்து இன்று மாலை 5.55 மணிக்கு ’ராஜமேளம்’ மேக்கிங்கின் குறித்த குறு வீடியோ வெளியாகிறது.
கர்ணன் படத்தின் கதைக்களம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் 2-ம் கட்ட படபிடிப்புடன் 90 சதவீத பணி தற்போது நிறைவடைந்துள்ளது. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.