Advertisment
Presenting Partner
Desktop GIF

திருமணமான 7 மாதத்தில் குழந்தை: தனுஷ் பட நடிகையை கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்புடத்துடன் பதிவிட்ட நிலையில், திருமணமான 7 மாதத்தில் குழந்தையா என சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

author-image
WebDesk
New Update
dd

நடிகை ஸ்வாரா பாஸ்கரிடம் திருமணமான 7 மாதத்தில் குழந்தையா என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்புடத்துடன் பதிவிட்ட நிலையில், திருமணமான 7 மாதத்தில் குழந்தையா என சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisment

நடிகை ஸ்வாரா பாஸ்கர் 2009-ம் ஆண்டு வெளியான மாதோலால் கீப் வாக்கிங் சீரியல் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ், பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.  இந்த படத்தில் ஸ்வாரா பாஸ்கர்  இரண்டாவது கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. 

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தலைவர் ஃபஹத் அகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ss

நடிகை ஸ்வாரா - ஃபஹத் அகமது இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், ஸ்வாரா தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த மே மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்தனர். 

இதைத்தொடர்ந்து, நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு செப்டம்பர் 23-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஸ்வாரா பாஸ்கர் தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில், பிரார்த்தனை கடவுளிடம் கேட்டுவிட்டு, ஒரு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் கிசுகிசுத்தது, ஒரு மாய உண்மை.. எங்கள் பெண் குழந்தை ராபியா 23 செப்டம்பர் 2023 அன்று பிறந்தார் என பதிவிட்டிருந்தார்.

ss

நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு ரசிகர்களும் சினிமா பிரமுகர்களும் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நீனா குப்தா, கொங்கோனா சென் ஷர்மா, டிஸ்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா போன்ற முக்கிய நபர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

ஆனால், சில விஷமக்கார நெட்டிசன்களோ ஸ்வாரா பாஸ்கரிடம், உங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணமானது. திருமணமாகி 7 மாதங்கள் கூட ஆகவில்லை அதுக்குள்ள குழந்தையா என்றும், அப்போது திருமணத்திற்கு முன்னே கர்ப்பமாக இருந்தீங்களா? என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment