Advertisment
Presenting Partner
Desktop GIF

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்து முக்கிய அப்டேட் : தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி

ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஷ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Captain Miller

கேப்டன் மில்லர் தனுஷ்

தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தபடம் குறித்து அப்டேட்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த ஆண்டு தமிழில் திருச்சிற்றம்பலம் என்ற ஃபீல்குட் படத்தை கொடுத்தார். அதேபோல் ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் வாத்தி திரைப்படம் வெளியானது.

இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், தமிழகத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வரும் இந்த படம் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடிக்கும் கதை என்று கூறப்படுகிறது.

மேலும் தனுஷின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய முயற்சியாகக் பார்க்கப்படும் கேப்டன் மில்லர் படம் குறித்து தற்போது 2 அப்டேட்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு ஜூலை மாதம் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை என்றாலும், படம் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர் படம் தொடங்கப்பட்டதில் இருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் முறையான அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை அச்சுறுத்தும் வகையில் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.  

வனவிலங்குகளில் நலன்களை கருத்தில்கொண்டு கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை நிறுத்துமாறு படக்குழுவினருக்கு தென்காசி கலெக்டர் உத்தரவிட்டார். இதில் திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடத்த கோரிய அனுமதியைப் படக்குழுவினர் தென்காசிக் மாவட்டத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் படத்தின்  தயாரிப்பாளர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment