தனுஷ் காட்டில் பட மழை! இளம் இயக்குநருடன் கூட்டணி!

அசுரனை தொடர்ந்து தனுஷின் இந்த படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அசுரனை தொடர்ந்து தனுஷின் இந்த படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush d 43, karthick naren

dhanush d 43, karthick naren

Dhanush's D43 with Karthick Naren: நடிகர் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Advertisment

நியூட்டனுக்கு டப் கொடுத்த சஞ்சு : டி 20 போட்டியில் அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தல்

Advertisment
Advertisements

இது தவிர, ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் அவரின் 43-வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே, தனுஷின் 43வது படத்தையும் தயாரிக்கிறது. இதனை ’துருவங்கள் பதினாறு’, ’நரகாசூரன்’, ’மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். அசுரனை தொடர்ந்து தனுஷின் இந்த படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் படம் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் மிச்சம்; மாவரைக்கும் சைக்கிள் கிரைண்டர்; வைரல் வீடியோ

தவிர, பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’ என்ற படத்திலும் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: