/tamil-ie/media/media_files/uploads/2022/01/Untitled-29.jpg)
Dhanush father kasthuri raja clarification about dhanush aishwarya divorce
18 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக ஜனவரி 17 அன்று சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இப்போது இந்த செய்தி தான், இணையத்தில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ரசிகர்கள் உள்பட பிரபலங்களும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.
தனது பிள்ளைகளுக்காக தனுஷ், தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன், நடிகர் தனுஷை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்; ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், நாகரீகமானவர் அவருக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டிருப்பதை எண்ணி வருந்துகிறேன். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தனுசுக்கு அறிவுரை கூறி சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ட்வீட்டரில் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனிடம் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ''இரண்டு பேரும் மரியாதையுடன் பிரிகிறார்கள். அவர்களை விட்டுவிடுங்கள்'' என்று பதிலளித்துள்ளார்.
மேலும் விஜய் அப்பா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் தனுஷ் தனது முடிவை மாற்றி, மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு குறித்து தனுஷின் அப்பா, கஸ்தூரி ராஜா இருவரையும் அழைத்து பேசியதாக தகவல் பரவி வருகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தான் உள்ளது. குடும்பங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைதான் இது. இருவரிடமும் பேசியுள்ளேன். அவர்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவரும் தற்போது சென்னையில் இல்லை ஹைதராபாத்தில் தங்கியுள்ளதாக கஸ்தூரி ராஜா கூறியதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.