Advertisment

தனுஷ் நடிக்கும் 50-வது படம் ராயன்; ஷார்ட்டான தலைமுடி... மொட்டை கெட்டப்பில் மிரட்டும் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது முந்தைய படமான கேப்டன் மில்லருக்காக நீளமாக முடி வளர்த்திருந்த நிலையில், புதிய படமான ராயன் படத்தில் அச்சுறுத்தும் தோற்றத்திற்காக தலைமுடியை ஷார்ட்டாக வைத்து, மொட்டை கெட்டப்பில் டெரராக மிரட்டியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Dhanush 50

தனுஷின் இயக்கத்தில் அவரே நடிக்க உள்ள அவருடைய 50-வது படத்துக்கு தற்காலிகமாக தனுஷ் 50 பெயரிடப்பட்டது. 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் தனுஷ் தனது முந்தைய படமான கேப்டன் மில்லருக்காக நீளமாக முடி வளர்த்திருந்த நிலையில், புதிய படமான ராயன் படத்தில் அச்சுறுத்தும் தோற்றத்திற்காக தலைமுடியை ஷார்ட்டாக வைத்து, மொட்டை கெட்டப்பில் டெரராக மிரட்டியிருக்கிறார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: D50 is titled Raayan: Dhanush looks menacing in his next

நடிகர் தனுஷ் இயகுனராக இரண்டாவது படத்தை இயக்குகிறார். தனுஷின் இயக்கத்தில் அவரே நடிக்க உள்ள அவருடைய 50-வது படத்துக்கு தற்காலிகமாக தனுஷ் 50 பெயரிடப்பட்டது. 

இந்நிலையில், நடிகர் தனுஷ் அவருடைய இயக்கத்தில் அவரே நடிக்கும் படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது முந்தைய படமான கேப்டன் மில்லருக்காக நீளமாக முடி வளர்த்திருந்த நிலையில், ராயன் படத்தில் ஒரு அச்சுறுத்தும் தோற்றத்திற்காக தலைமுடியை ஷார்ட்டாக வைத்து மொட்டை கெட்டப்பில் டெரராக மிரட்டியிருக்கிறார்.

ராயன் போஸ்டரில், நடிகர் தனுஷ் பெரிய மீசையுடன் ஷார்ட்டாக வெட்டப்பட்ட தலை முடியுடன் மொட்டை கெட்டபில் டெரராக மிரட்டலாக தோற்றம் அளிக்கிறார். 

போஸ்டரில் நடிகர் தனுஷ், ரத்தக்கறை படிந்த கவசத்தை அணிந்து, துளையிடும் கருவியை ஏந்தியவாறு காணப்படுகிறார். பின்னணியில், கேப்டன் மில்லரில் தனுஷுடன் கடைசியாகப் பார்த்த சந்தீப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமும் ஒரு உணவு டிரக்கில் ஒரே மாதிரியான மூர்க்கமான தோற்றத்தில் காணப்படுகிறார்கள். மூவரும் கையில் ஆயுதம் ஏந்தியவாறு காணப்படுகின்றனர்.

முன்னதாக, இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் நாடகம் என்று யூகங்கள் உலா வந்தன. பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, ​​ஊகங்கள் உண்மையாகி வருகின்றன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் இரண்டாவது இயக்குனர் முயற்சியைக் குறிக்கும் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குனராக, நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பா பாண்டி படத்தை முதலில் இயக்கினார், ராஜ்கிரணின் கதாபாத்திரத்தின் இளம் வயது கதாபாத்திரமாக, தனுஷின் நீட்டிக்கப்பட்ட கேமியோ பாத்திரத்துடன் இயக்கினார். தற்போது டி50 படத்தில் முழுவதுமாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். 

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்துக்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்கிறார், இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயன் படம் மட்டுமில்லாமல், இன்னும் பெயர் வைக்கபடாத, சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற பெயரில் தனுஷ் நடிகராக இல்லாமல், மல்டி-ஸ்டாரர் காதல் படம் ஒன்றையும் அவர் இயக்குகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment