லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் மீது கடுமையாக குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் சனிக்கிழமையன்று கடிதம் வெளியிட்டார்.
நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அப்படத்தின் 3 வினாடி காட்சிகளை எங்களது ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக என் மீதும் கணவர் விக்னேஷ் சிவன் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார் எனக் குற்றஞ்சாட்டியும், அவர் மீது கடுமையாக விமர்சனம் செய்தும் கடிதம் வெளியிட்டார்.
இது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நயன்தாராவின் கடிதத்திற்கு தனுஷ் உடன் நடித்த நடிககைள் பலரும் லைக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு பாரத் பாலாவின் மரியான் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த பார்வதி திருவோது, நயன்தாராவின் கடிதத்திற்கு நமஸ்தே எமோஜி ஐகான்களுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் மறுபதிவு செய்தார்.
2016 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் கொடி படத்தில் தனுஷுடன் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் நயன்தாராவின் பதிவை லைக் செய்தார். நஸ்ரியா ஃபஹத்,
கார்த்திக் சுப்பராஜின் 2021 ஆக்ஷன் த்ரில்லர் ஜகமே தந்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்ருதி ஹாசன், கௌரி ஜி கிஷன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதோடு ஏக்தா கபூர், தியா மிர்சா, ஷில்பா ராவ் மற்றும் உர்ஃபி ஜாவேத் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் நயன்தாராவின் கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“