/tamil-ie/media/media_files/uploads/2018/01/enai-noki-paayum-thota.jpg)
enai noki paayum thota
Enai Nokki Paayum Thotta: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது. இதன் வெளியீடு தாமதமானதற்குக் காரணம் நிதி பிரச்சினைகள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த படம் செப்டம்பர் 6-ஆம் தேதி உலகளவில் திரைக்கு வரும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
எதிர்பாராத விதமாக மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா, படம் சிக்கலில் சிக்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ஃபைனான்ஸியல் பிரச்னைகளை தீர்க்க, கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கும் நிலையில், நாளை இப்படம் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆகையால், எனை நோக்கி பாயும் தோட்டா நாளை வெளியாகாமல், சனிக்கிழமையோ அல்லது அதற்கு பின்னரோ வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.