Dhanush Ilamai Thirumbuthe video with Aishwarya goes viral : தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவிற்காக பேட்டை படத்தில் இடம் பெற்றுள்ள இளமை திரும்பிதே பாடலை பாடிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் அன்று நடைபெற்ற நிகழ்வின் போது இந்த பாடலை அவர் பாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் அந்த பாடலை பாடிக் கொண்டு ஐஸ்வர்யாவை கை காட்ட அவர் வெட்கத்தில் சிரிக்கிறார். விஜய் ஆண்ட்ரூஸ் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த வீடியோ
சமீபத்தில் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கிய தனுஷ் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தி கிரே மென் படத்தில் நடித்து வருகிறார். அது போன்று அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil