பிரான்ஸ் கேன்ஸ் விழாவில் நடிகர் தனுஷ்! ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!!!

சமீபத்தில் ஹாலிவுட்டில் நடித்த தனுஷ் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)”. இந்தத் திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட திருவிழா இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தனுஷ் நடித்த படம் திரையிடப்படுகிறது. இதற்காக தனுஷ்-க்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

பிரான்ஸில் நடைபெறும் இந்த ஆண்டின் கேன்ஸ் விழாவில் பங்கேற்க தனுஷ் புறப்பட்டு சென்றார். கேன்ஸ் விழாவில் இவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். அங்கு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து அவரின் ஃபோட்டோஸ் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

×Close
×Close