Advertisment

புதிய அவதாரம் எடுக்கும் ரஜினி பேரன்: பாடல் ஆசிரியராக யாத்ரா தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அவர் தனது மகன் யாத்ரா-வஒ பாடலாசிரியராக அறிமுகப்படுத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhanush Sons

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் சுருக்கமாக NEEK என்று குறிப்பிடப்படுகிறது. இந்த படம் இன்றைய இளம் தலைமுறையின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அவர் தனது மகன் யாத்ரா-வஒ பாடலாசிரியராக அறிமுகப்படுத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

இரண்டு முறை தேசிய விருது வாங்கி நடிப்பு அசுரன் என்று புகழ்பெற்ற நடிகர் தனுஷ், சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார். தனுஷ் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. 

இதையடுத்து, நடிகர் தனுஷ் தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். ராயன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷ், மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன், பவிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் சுருக்கமாக NEEK என்று குறிப்பிடப்படுகிறது. இந்த படம் இன்றைய இளம் தலைமுறையின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலான, கோல்டன் ஸ்பேரோ பாடல் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது. இந்த பாடலை அறிவு எழுத, சுப்புலட்சுமி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், NEEK படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன் மகனை தனுஷ் நடிகராக அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் பாடலாசிரியராக அறிமுகப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment