‘ரகிட ரகிட ரகிட...’ தனுஷ் பிறந்த நாளில் வெளியான ஜகமே தந்திரம் பாடல்
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து அவருடைய பிறந்த நாளில் மாசான ஒரு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரஜினியின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை நினைவூட்டும்படியாக இருக்கிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து அவருடைய பிறந்த நாளில் மாசான ஒரு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரஜினியின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை நினைவூட்டும்படியாக இருக்கிறது.
Advertisment
நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளுக்காக ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபி வெளியிடப்பட்டது. இன்று அவருடைய பிறந்தாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரப படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் தனுஷ், தி, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள‘ரகிட ரகிட ரகிட...’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ் ஆவதற்கு கொரோனா பொது முடக்கம் முடிவுக்காக காத்திருக்கிறது.
Advertisment
Advertisement
இந்த ரகிட ரகிட ரகிட பாடலின் வீடியோ முழுவதும் தனுஷ் படம் இடம் பெறவில்லை. அதுவே வியப்பாக இருக்கிறது. மேலும், சந்தோஷ் நாராயணனின் குரலில் ரகிட ரகிட ரகிட என்னவேனா நடக்கட்டும் எனக்கு கவலை இல்லை என்ற பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.
இந்த பாடலில் தனுஷின் தோற்றமும் நடிப்பும் ரஜினிகாந்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக, அவரது முறுக்கிய மீசை, சில்க் சட்டை மற்றும் வேட்டி, பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் கெட்-அப்-ஐ நினைவூட்டுகிறது. கார்த்திக் சுப்பராஜின் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடலும் அதன் ஆற்றலையும் பார்க்கும்போது, ரஜினிகாந்த் நடித்து 1978ம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ என்ற மாஸ் பாடலை நினைவுபடுத்துகிறது. இந்த படத்துக்காக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
‘ரகிட ரகிட ரகிட...’ என்ற பாடலும் அந்த வகையான ஒரு பாடல்தான். தனுஷின் 37 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த மாஸ் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷும் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும் முதல் முறையாக் இணைந்து பணிபுரிந்துள்ள இந்த ஜகமே தந்திரம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படம் கடந்த மே 1ம் தேதியே திரையரங்குகளில் வெளியாகி இருக்கும். ஆனால், இந்த கோவிட்-19 தொற்று நோய் ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், இந்த படத்தை சினிமா தியேட்டர்களில் வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர்.
ஜகமே தந்திரம் படத்தில் நடிகர் தனுஷ் உடன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"