’புதுப்பேட்டை’க்கு பின் தனுஷின் கேங்ஸ்டர் படம்… டிரைலர் வெளியான 8 மணி நேரத்தில் 4 மில்லியன் வியூவ்ஸ்

Dhanush jagame thanthiram movie trailer crosses 3 million views in 6 hours: இன்று வெளியான தனுஷின் ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர், வெளியான சில மணி நேரங்களிலே 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

jagame thanthiram

இன்று வெளியான தனுஷின் ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர், வெளியான சில மணி நேரங்களிலே 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெகமே தந்திரம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோவிற்காக படத்தில் இடம் பெற்றுள்ள ரகிட ரகிட பாடலை சில மாதங்களுக்கு முன்னர் படக் குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டனர். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பின்னர், இன்னொரு பாடலான, புஜ்ஜி பாடல் வெளியானதிலிருந்து அதிக பார்வைகளை கடந்து வருகிறது. பாடல்கள் வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி 8 மணி நேரத்திலே 4 மில்லியன் பார்வைகளை கடந்து வருகிறது.

படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஜூன் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு டிரைலர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இன்று டிரைலர் வெளியான நிலையில் அதிக பார்வைகளை கடந்து வருகிறது. அதோடு டிரைலரை ரசிகர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த படம் தயாராகி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திரையில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையில் வெளியிட முடியாததால், ஒடிடி தளங்களில் வெளியிடும் முடிவில் இருப்பதாக தனுஷ் நான்கு மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். தற்போது முன்னனி ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இல் வெளியாக உள்ளது.

ஆனால், டிரைலரை பார்த்த பின் இந்த திரைப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்திற்கு பின் தனுஷ் நடிக்கும் கேங்ஸ்டர் படம், வெறி ஏறுது என ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சிலர் கதைத் தேர்வில் தனுஷ் வேற லெவல், அசுரன், கர்ணனுக்கு பிறகு மற்றும் ஒரு மாஸ் படம் என பதிவிட்டுள்ளனர்.

விரைவில் தனுஷ் இந்திய சினிமாவை ஆள்வார் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhanush jagame thanthiram movie trailer crosses 4 million views in 8 hours

Next Story
பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2: கதையே மாறுது போல!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com