தனுஷுக்கு ஜோடியான நடிகை, இப்போ ரஜினிக்கு மனைவியாக..! வேட்டையன் அப்டேட்

தனுஷ் மனைவியாக நடித்தவர்… இப்போது ரஜினிக்கு ஜோடியானார்; வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் இங்கே

தனுஷ் மனைவியாக நடித்தவர்… இப்போது ரஜினிக்கு ஜோடியானார்; வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் இங்கே

author-image
WebDesk
New Update
Rajinikanth Vettaiyan 2

தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது ரஜினி நடித்தும் புதிய படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் மனைவியாக நடித்தவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் மஞ்சு வாரியர். இந்த படத்தில் இருவரின் நடிப்பும் மிகவும் பிரமாதமாக இருந்தது என அனைவராலும் பாராட்டப்பட்டது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும், சமீபகாலமாக தமிழ் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். அந்தவகையில் அசுரன் படத்தை அடுத்து அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்தார்.

இந்தநிலையில், தற்போது ரஜினியின் ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார்.

Advertisment
Advertisements

Manju Warrier

இந்தநிலையில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை சமீபத்தில் மஞ்சு வாரியர் உறுதி செய்துள்ளார்.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கும் மலையாள திரைப்படமான ’புட்டேஜ்’ என்ற படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் ’வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். எனவே தனுஷின் மனைவியாக நடித்த நடிகை ரஜினிக்கும் மனைவியாக நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Manju Warrior

ஏற்கனவே ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ஸ்ரேயா, அதே நேரத்தில் ’சிவாஜி’ படத்தில் ரஜினிக்கும் ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு படங்களும் சில மாத இடைவெளியில் வெளியானது.

மேலும் ரஜினி, தனுஷ் மட்டுமின்றி ’விடுதலை 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவியாகவும் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dhanush Manju Warrier Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: