New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/FotoJet.jpg)
தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படம்
தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படம்
Dhanush - Karthik Subbaraj Film: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம், ’பேட்ட’. நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் அணு அணுவாய் ரசித்து மகிழ்ந்தனர். அதன் பிறகு தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்தார் கார்த்திக். இருப்பினும் அவர் நடிகர் தனுஷை வைத்து, தனது அடுத்தப் படத்தை இயக்குவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது அந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இவர் மலையாளத்தில் நடித்த ‘மாயநதி’, ‘வரதன்’ ஆகியப் படங்கள் பெரும் வெற்றியடைந்தன. தற்போது நடிகர் ப்ரித்விராஜுடன் இணைந்து ‘பிரதர்ஸ் டே’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதோடு சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
I am super exited about my next project, which will be directed by @karthiksubbaraj and produced by @sash041075 of #ynotstudios with a brilliant cast and crew. Can’t wait for this to start next month in London.
follow @StudiosYNot for further updates. pic.twitter.com/M3ZvO0Z7YS
— Dhanush (@dhanushkraja) 19 July 2019
தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் படத்திற்கு ’பேட்ட’ படத்தில் ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தை ‘ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணை தயாரிப்பாக இணைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் படபிடிப்புகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.