New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/05/dhanush-night-parthy-2025-07-05-15-02-25.jpg)
Dhanush Night Parthy
சமீபத்தில், க்ரித்தி சனோன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடித்த 'தேரே இஷ்க் மே' (Tere Ishk Mein) திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
Dhanush Night Parthy
சினிமா உலகில் எப்போதுமே நட்சத்திரங்களின் நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், சமீபத்தில் நடந்த ஒரு இரவு விருந்து சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் கனிகா தில்லான் ஏற்பாடு செய்த இந்த நட்சத்திரங்கள் நிறைந்த விருந்தில், யாரும் எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். இவருடன் பாலிவுட் நடிகைகள் க்ரித்தி சனோன், தமன்னா பாட்டியா, மிருணாள் தாக்கூர், பூமி பெட்னேகர் மற்றும் இயக்குனர் ஆனந்த் எல். ராய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விருந்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
"எங்கள் இதயங்கள் நிறைந்துவிட்டன! எங்கள் ராஞ்சனா @dhanushkraja வீட்டில் இருக்கிறார் - நாங்கள் உங்களை நேசிக்கிறோம்! பழைய மற்றும் புதிய நண்பர்களுடன் - பெரிய புன்னகைகள் - பெரிய இதயங்கள்! நினைவுகளுக்கு நன்றி," என்று கனிகா தில்லான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இந்த பதிவின் கீழ் தங்கள் அன்பை வெளிப்படுத்தி, ஹார்ட் எமோஜிகளை அள்ளித் தெளித்துள்ளனர்.
'தேரே இஷ்க் மெயின்'
தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் இணைந்து நடித்துள்ள 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு விருந்தில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இயக்குனர் ஆனந்த் எல். ராய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் இருவரும் இணைந்து கேக் வெட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படம் ஆனந்த் எல். ராயின் 2013 ஆம் ஆண்டு வெளியான ஹிட் படமான 'ராஞ்சனா' வின் கருப்பொருள் தொடர்ச்சியாகும் என்று கூறப்படுகிறது. ஆனந்த் எல். ராய் இது குறித்து பேசுகையில், "இது ராஞ்சனா உலகின் ஒரு பகுதிதான், ஆனால் அது ஒரு விரிவாக்கமே தவிர நீட்டிப்பு அல்ல. இது ஒரு புதிய கதைக்களத்துடன் உணர்ச்சிபூர்வமான ஆழத்தை மேம்படுத்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பின் நிறைவை அறிவிக்கும் விதமாக, நடிகை க்ரித்தி சனோன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல். ராய் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அழகான படங்களை பகிர்ந்துள்ளார். உணர்வுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும் சவாலாக இருந்தபோதிலும், இந்த திரைப்படத்தின் பயணம் ஒரு அழகான அனுபவம் என்று அவர் விவரித்தார். இயக்குனர் ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் ஒவ்வொரு நொடியும் தான் ரசித்து நடித்ததாகவும், அவருக்கு நன்றி தெரிவித்த க்ரித்தி, தனுஷை தான் பணிபுரிந்த மிகச்சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான நடிகர்களில் ஒருவர் என்றும் பாராட்டினார்.
குல்ஷன் குமார், டி-சீரிஸ், மற்றும் கலர் எல்லோ இணைந்து வழங்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமார் இணை தயாரிப்பில் உருவாகிறது. ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, இர்ஷாத் கமில் பாடல்களை எழுதியுள்ளார். தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடித்துள்ள இந்த திரைப்படம், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.