Advertisment

தனுஷின் பாடலுக்கு அமெரிக்காவில் நடனமாடி, பாராட்டைப் பெற்ற மும்பை நடனக்குழு!

V Unbeatable: நாங்கள் உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் பிரமாதமான ஒன்றை தருகிறீர்கள். உங்களின் கிரியேட்டிவிட்டி கணக்கிடமுடியாதது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
V Unbeatable dance team

வி அன்பீட்டபிள்

’அமெரிக்கா’ஸ் காட் டேலண்ட்’ என்ற நிகழ்ச்சியில், மும்பையைச் சேர்ந்த ‘வி அன்பீடபிள்’ என்ற நடனக் குழுவினர், மீண்டும் கலக்கியிருக்கிறார்கள். பார்வையாளர்கள், ஜட்ஜுகள் இவர்களின் நடனத்தைப் பார்த்து, திகைத்துப் போயிருக்கிறார்கள். நேர்த்தியான கோரியோகிராப், வளைந்து நெளிந்த ஸ்டெப்களுடன் கூடிய அந்த நடனம், இரண்டாம் காலிறுதி போட்டியாக செவ்வாயன்று ஒளிபரப்பப்பட்டது.

Advertisment

29 நடனக் கலைஞர்களை உள்ளடக்கிய ’வி அன்பீட்டபிள்’ குழு, நடிகர் தனுஷின் ’மாரி’ படத்திலிருந்து, “தர லோக்கல்” என்ற பாடலுக்கு டால்பி தியேட்டரில் நடனமாடினர். அவர்களின் எனெர்ஜி லெவல், 2 நிமிடம் அவர்களின் அந்த பெர்ஃபாமென்ஸ் ஆகியவை, பார்வையாளர்களை இன்னும் உற்சாகப்படுத்தியது.

இது குறித்து அந்நிகழ்ச்சியின் ஜட்ஜ் சைமன் காவெல், “இப்போது பேசுவது கடினமாக உள்ளது. நான் சொல்வதெல்லாம், நாங்கள் உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் பிரமாதமான ஒன்றை தருகிறீர்கள். உங்களின் கிரியேட்டிவிட்டி கணக்கிடமுடியாதது. முந்தைய சில எபிசோட்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு நீங்கள் செய்த இந்த பெர்ஃபாமென்ஸ் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த 2 நிமிட பெர்ஃபாமென்ஸில் எங்களை வென்று விட்டீர்கள்” என்றார்.

அதோடு மற்ற ஜட்ஜுகளும் ‘வி அன்பீட்டபிள்’ குழுவினரை வெகுவாகப் பாராட்டினர்!

Mumbai America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment