/indian-express-tamil/media/media_files/2025/04/15/3k1cqyUkvo9kHkTBl49g.jpg)
தனுஷ் பட இயக்குநர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த "ஏப்ரல் மாதத்தில்"என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து "புதுக்கோட்டையில் இருந்து சரவணன்", "மெர்குரி பூக்கள்", "கிழக்கு கடற்கரை சாலை" உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன்பிறகு, நடிப்பில் கவனம் செலுத்திய அவர், "ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார்", "பொம்மை நாயகி" என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "மகாராஜா" படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எஸ்.ஸ்டான்லி (58) இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.