அசுரன் படத்திற்கு பிறகு வெளியான கர்ணன் படம் தவிர மற்ற அனைத்து படங்களும் கை கொடுக்காத நிலையில், ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தனுஷ், நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.
குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில் இணைந்த மித்ரன் ஜவகர் – தனுஷ் கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம்தான் திருச்சிற்றம்பலம். பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களை கவர்ந்ததா, தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததா?
அம்மாவின் இழப்புக்கு அப்பாதான் காரணம் என்பதால் அப்பா பிரகாஷ்ராஜிடம் பேசாமல் இருக்கும் மகன் தனுஷ், தாத்தா பாரதிராஜாவுடன் மட்டும் பேச்சுவார்த்தையுடன் இருக்கிறார். தாத்தாவான பாரதிராஜாவின் திருச்சிற்றம்பலம் என்ற பெயரே தனுஷ்க்கும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுஷை நண்பர்கள் பலரும் பழம் பழம் என்று கிண்டல் செய்கின்றனர். வெளியில் எது நடந்தாலும் தனது சிறுவயது தோழியான நித்யா மேனனிடம் ஹேர் செய்துகொள்கிறார் தனுஷ். இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை யதார்த்தமாக சொன்ன கதை தான் திருச்சிற்றம்பலம்.
டெலிவரி பாய் வேலை நண்பர்களின் கேலி கிண்டல், நித்யா மேனனுடன் நட்பு, ராஷிகண்ணா வை கரக்ட் செய்ய முயற்சி என தனுஷ் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் சோபா கேரக்டரில் வரும் நித்யா மேனன், ஒரு சில இடங்களில் தனுஷை் பீட் பண்ணும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் பாதி காமெடி 2-ம் பாதி செண்டிமெண்ட் என யாராடி நீ மோகினி பட ஸ்டைலில் இருந்தாலும், அலட்டிக்கொள்ளாத திரைக்கதை ரசிகர்களின் ரசனைக்கேற்ப அமைந்துள்ளது. தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் என அனைவரின் கேரக்டரும் முக்கியத்துவத்துடன் எழுத்தப்பட்டிருப்பது சிறப்பு.
சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் மீண்டும் தனது வழக்கமான இசையை கொடுத்து ரசிகர்களை கட்டி வைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது. தனுஷ் நித்யா மேனன் காம்போ, கெஸ்ட்ரோலில் பிரியா பவானி சங்கர் என படத்திற்கு பலம் அதிகம்.
ஆனால் பிரியாத வரம் வேண்டும் பிரஷாந்த – ஷாலினி, விருமனின் அப்பா விரோதம், அம்மா செண்டிமெண்ட், தனுஷ் நடிப்பில் ஏற்கனவே வெளியான யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் சாயல் தெரிவது தவிக்க முடியவில்லை. இன்னும் சில காட்சிகள் மற்ற படங்களின் காட்சியை ஞாபகப்படுத்தவதை தவிக்க முடியவில்லை. இருந்தாலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் வழககமான கதைதான் என்றாலும் தனி இடம் பிடிக்கும் வகையாக திரைக்கதை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil