Advertisment

அனல் பறந்த வாதம்... தனுஷ் - நயன்தாரா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட் பிலிக்ஸ் நிறுவனத்தின் மனுவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

author-image
WebDesk
New Update
dhanush nayanthara netflix madras high court verdict postponed Tamil News

நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட் பிலிக்ஸ் நிறுவனத்தின் மனுவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வொண்டர் பார் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் எதிர்நீச்சல், வேலை இல்லா பட்டதாரி, காக்கா முட்டை, மாரி, நானும் ரவுடிதான், விசாரணை, வட சென்னை உள்ளிட்ட வெற்றிப் படங்களை  தயாரித்துள்ளது. 

Advertisment

இந்நிலையில், முன்னணி நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படத்தில் தான் மலர்ந்துள்ளது. 

இந்த சூழலில், நடிகை நயன்தாராவின் திருமணம் ஆவணப் படமாக நெட்பிளிக்சில் கடந்த நவம்பரில் வெளியானது. இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறியும், அதை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் தனுஷ் சார்பில் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஜனவரி 8 அன்று விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை இன்றைய தேதியை குறிப்பிட்டு தள்ளிவைத்தார். 

Advertisment
Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (ஜன.22) நடைபெற்றது. அப்போது, "நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர் முடியும். காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று நெட் பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் வாதிட்டப்பட்டது. 

இதையடுத்து, "படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னை வீனஸ் காலனியில் தான் அலுவலகம் இருந்தது எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தின் அத்தனை காட்சிகளும் தனக்கு சொந்தமானவை" என்று தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Entertainment News Tamil Dhanush Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment