Advertisment

மாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்!

கார்த்திக் சுப்பராஜின் ’சுருளி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhanush, d44, sun pictures

Dhanush's Next with Sun Pictures: சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'அசுரன்' திரைப்படம் 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இப்படத்தில் நடுத்தர வயது மனிதராக நடித்திருந்த நடிகர் தனுஷ், தனது இயல்பான நடிப்புக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றார். மஞ்சுவாரியர், டீஜே அருணாச்சலம், கெவின் கருணாஸ், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து மிகுந்த நாட்களாக தயாரிப்பில் இருந்த தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் வெளியானது. 25 வயது இளைஞனாக அவர் நடித்திருந்த இப்படம் தோல்வியை தழுவியது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள 'பட்டாஸ்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இதனை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சினேகா முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜின் ’சுருளி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் இயக்குநர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் வெற்றி மாறன், கார்த்திக் சுப்பராஜ், ராம்குமார் மற்றும் செல்வராகவன் போன்றவர்களின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன.

இதற்கிடையே ரஜினிகாந்த நடிக்கும் அடுத்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment