நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்திருக்கும் திரைப்படம் ’த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’.
Advertisment
இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கும் இந்தப் படம், இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் இப்படம் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடந்தது. அதில் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷுடன் கலந்துக் கொண்டார் தனுஷ்.
Advertisment
Advertisements
விழாவில் பேசிய இயக்குநர் தனுஷின் திறமைகளைப் பாராட்டினார். பின்னர் பேசிய தனுஷ் தான் நடிக்க வந்து 17 ஆண்டுகள் கழிந்து விட்டதை நினைவுக் கூர்ந்தார்.
பின்னர் பக்கிரி (தமிழ் வெர்சன்) படத்தின் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டார் தனுஷ்! இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.