Advertisment
Presenting Partner
Desktop GIF

நான் பேச முயன்றேன், அவர் போனை எடுக்கவில்லை: தனுஷ் மீதான விமர்சனம் குறித்து நயன்தாரா விளக்கம்!

தனுஷ் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள நயன்தாரா, அவரை தொடர்கொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dhanush Naua

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தனது ஆவணப்படம் தொடர்பான நடிகர் தனுஷ் குறித்து கொடுத்த அறிக்கை வெளியானதில் இருந்து அடிக்கடி சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது தனுஷ் குறித்து விமர்சித்தது ஏன் என்பது குறித்து நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

Read In English: Dhanush refused to take Nayanthara’s phone calls, ‘Lady Superstar’ says she wanted to clear the air after being denied NOC: ‘Why was he angry?’

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது பெரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரது திருமணத்தை நெட்பிளிக்ஸ்க்கு விற்பனை செய்த நிலையில், அதற்கு தேவையாக ஃபுட்டேஜ் கிடைக்கவில்லை என்பதால், படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா தொடர்பான காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.

அதேபோல் தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்காததால், அவரை கடுமையாக விமர்சித்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் பலரும் தனுஷ்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், முன்னணி நடிகைகள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து அவரின் பதிவுகளை லைக் செய்திருந்தனர்.

Advertisment
Advertisement

இது குறித்து தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ள நயன்தாரா,  தனுஷ் 2014-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தின் நான்கு வரி பாடலுக்கு தடையில்லா கடிதம் வழங்காமல் தன்னையும் விக்னேஷையும் தடுத்து நிறுத்தி, தனக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. "ஒரு கட்டத்திற்குப் பிறகு, நாங்கள் நாஙகள் அந்த காட்சிகளை ஆவணப்படத்தில் சேர்க்க விரும்பவில்லை. அவரிடம் இது குறித்துதெளிவுபடுத்த விரும்பினேன், ஆனால் அவர் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.

நெட்ஃபிக்ஸ் தரப்பில், அவரை நண்பர் என்று நினைத்தேன். இந்த பாடலை நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்த "முதலில் ஒப்புக்கொள்பவர்" பாடலை  பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த பாடல் ஒரு சர்ச்சைக்குரியதாக இருக்காது என்று நினைத்தேன். நாங்கள் ஆவணப்படத்தை வெளியிடவிருந்த நேரத்தில் அதை வெளியிடவில்லை. ஆனால் நயன்தாராவின் ரசிகர்கள் இதை ஒரு விளம்பர ஸ்டண்ட் என்று நினைத்தார்கள், ஆனால் எங்கள் மனதில் அப்படி இல்லை. ஆனால் ஆவணப்படம் வெளியீட்டிற்கு சற்று முன்பு சட்ட அறிவிப்பு வந்தது, நாங்கள் பதில் அளிக்க வேண்டியிருந்தது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ், நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மீது, நானும் ரவுடி தான் படத்தில் இருந்து அங்கீகரிக்கப்படாத பி.டி.எஸ் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய பிறகு பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நயன்தாரா இது பற்றி கூறுகையில், படத்தில் நாங்கள் விரும்பிய ஒரே விஷயம் அந்த 4 வரிகள்தான். எங்கள் வாழ்க்கையை, எங்கள் அன்பை, எங்கள் குழந்தைகளை சுருக்கமாகக் கூறுவதால், அந்த 4 வரிகள் எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாக மிகவும் தனிப்பட்டதாக இருந்தது. ஆனால் அது நடக்காதபோது, அதனை பயன்படுத்தாமல் இருக்கிறோம். எங்களுக்கு என்ஓசி கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் அதை கடந்து வந்துவிட்டோம்.

இது குறித்து “நான் வழக்கமாக செய்யாத வகையில் தனுஷின் மேலாளரிடம் பேசினேன். இது அவரது படம் என்ஓசி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவரது அழைப்பு,  ஆனால் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நான் அவருடன் பேச விரும்பினேன். அவர் எங்கள் மீது கோபப்பட்டார். இந்த தவறான புரிதல் எங்கிருந்து தொடங்கியது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதிர்காலத்தில் நாங்கள் எங்காவது பார்த்துக்கொண்டால், குறைந்தபட்சம் 'ஹாய்' சொல்ல முடியும் என்று நான் விரும்பினேன். ஆனால் தனுஷ் பேசவே இல்லை.

"நான் அவர் மீது கோபப்படவில்லை, நான் அதைக் கடந்து சென்றேன். கிளிப்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தோம். விக்னேஷ் எங்களுக்காக புதிய பாடல்களை எழுதினார். ஆனால் ட்ரெய்லர் வெளியானதும், படத்தில் இருந்து ஒரு பி.டி.எஸ் காட்சிகள் மீண்டும் சர்ச்சசையானது.  இந்த பி.டி.எஸ் காட்சிகள் படத்தின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை. இவை எங்களின் ஃபோன்களிலும் மற்ற குழுவினரின் போன்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள். அது அதிகாரப்பூர்வ காட்சி இல்லை. ரசிகர்களாலும் சக நண்பர்களாலும் மிகவும் மதிக்கப்படும் தனுஷ் போன்ற அதை விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் ட்ரெய்லர் வெளியானதும் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இது நியாயமற்றதாக உணர்ந்தேன் என்று கூறியள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கான தனது முடிவை நியாயப்படுத்திய நயன்தாரா, “நான் எதையாவது திரித்து பொய் சொன்னால் மட்டுமே நான் பயப்பட வேண்டும். நான் அதைச் செய்யவில்லை என்றால், நான் பயப்பட வேண்டியதில்லை. நான் இப்போது பேசவில்லை என்றால், விஷயங்கள் ஏற்கனவே பெரிதாக சென்றுவிட்ட நிலையில், இனி எவருக்கும் தங்களுக்கு ஆதரவாக நிற்க தைரியம் இருக்காது என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

நவம்பரில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் தனுஷுக்கு எதிரான தனது நீண்ட குறிப்பில், “நானும், எனது பெற்றோரும், படத்திற்கு எதிராக கொதித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பழிவாங்குவது எங்களை மட்டுமல்ல, அதற்காக தங்கள் முயற்சியையும் நேரத்தையும் கொடுத்த மக்களை பாதிக்கிறது. நீங்கள் மேடையில் பேசும் கருத்துக்களுக்கு பாதியாக நீங்கள் நிஜவாழ்க்கையில் இருக்க விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment