பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்த ‘மாரி 2’ படம் கடந்த ஆண்டு வெளியானது. மாரி முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் இசையமைத்தார்.
யுவன் ஒப்பந்தம் ஆன போதே, மாரி அளவுக்கு மியூசிக் இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால், அப்படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. படம் ரிலீசான போது, ‘ஒரு பாடல் மட்டும் பார்க்கவா ஒரு படத்துக்கு வர முடியும்? என்று மாரி 2 படம் சுமாராக இருந்ததையும், ரவுடி பேபி பாடலை பார்க்க வேண்டும் என்ற அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியும் ரசிகர்கள் கமெண்ட் அடித்தனர்.
பிரபுதேவா நடனம் அமைத்து தனுஷ்-சாய் பல்லவி இருவரும் சேர்ந்து பட்டையை கிளப்பிய ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பில்போர்ட் இசை பட்டியலில் இடம்பிடித்தது. யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் நிகழ்த்தியது.
இந்நிலையில், இந்த 2019ம் ஆண்டின் டாப் 10 மியூசிக் வீடியோ பட்டியலில் தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடல் 7வது இடத்தை பிடித்து மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது.
No.7 on Global @billboard chart of Top 10 most viewed music videos in the world 2019!
Most Viewed Music Video in India 🙂 ????????@dhanushkraja @PDdancing @thisisysr @Sai_Pallavi92 @omdop @amaranart @vasukibhaskar @AlwaysJani @editor_prasanna @wunderbarfilms @vinod_offl @divomovies pic.twitter.com/yBiAch9ffL— Balaji Mohan (@directormbalaji) December 6, 2019
இது குறித்து ‘மாரி 2’ இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.