மேடையில் ரொமான்ஸ் பாடல்- வெட்கம்… கனவுகளாய் விரியும் பழைய சந்தோஷம்!

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் மேடையில் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் பழைய வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் மேடையில் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் பழைய வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Dhanush sang romance song for Aishwarya, Dhanush sing Ilamai thirumbuthe song for Aishwarya, தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு, தனுஷ் ரொமான்ஸ் பாடல், இளமை திரும்புதே தனுஷ் பாடல் வீடியோ, தனுஷ் ஐஸ்வர்யா ரொமான்ஸ் வீடியோ, Aishwarya Rajinikanth, fans shares dhanush singing video, Dhanush Aishwarya separation, actor Dhanush, Aishwarya Dhanush, Tamil news

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவரும் சேர்ந்து இருந்தபோது, தனுஷ் மேடையில் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் பழைய வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தொடங்கிய நடிகர் தனுஷின் திரைப்பயணம் தற்போது சிறந்த நடிகருக்கான 2 தேசிய விருதுகளுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்கம், சினிமா தயாரிப்பு என்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment
Advertisements

“நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு தாங்கள் பிரிவதை அறிவித்தனர்.

தமிழ் சினிமா உலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தது குறித்து ரசிகர்களும் நெட்டிசன்களும் தங்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருந்தபோது, நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் மேடையில் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் பழைய வீடியோ நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், தனுஷ் மேடையில், ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம் பெற்ற “இளமை திரும்புதே… புரியாத புதிராச்சே… இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே…

ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே” என்று பாடலைப் பாடுகிறார். அங்கே நிற்கும் தனது மனைவி ஐஸ்வர்யாவை கட்டி அனைத்து காதலை வெளிப்படுத்துகிறார். தனுஷின் ரொமான்ஸ் பாடலைக் கேட்டு ஐஸ்வர்யா வெட்கப்பட்டு சிரிக்கிறார்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில், இருவரும் சேர்ந்து இருந்தபோது, தனுஷ் ரொமான்ஸ் பாடல் பாட, ஐஸ்வர்யா வெட்கத்தில் சிரிக்கும் காட்சி கனவுகளாய் விரியும் பழைய சந்தோஷமான வீடியோவை ரசிகர்களும் நெட்டிசன்களும் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Aishwarya Dhanush Tamil Cinema Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: