Advertisment

கர்ணன் ரொம்ப ஸ்பெஷல்; சீறும் கேள்விகளுடன் வருவான்: தனுஷ்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தனக்கு ரொம்ப ஸ்பெஷலான திரைப்படம் என்று நடிகர் தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், கர்ணன் சீறும் கேள்விகளுடன் வருவான் என்று எதிர்பார்பைக் கூட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dhanush, karnan, mari selvaraj, karnan movie, karnan movie special for me, தனுஷ், கர்ணன் திரைப்படம், கர்ணன், மாரி செல்வராஜ், tamil cinema, dhanush press note

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தனக்கு ரொம்ப ஸ்பெஷலான திரைப்படம் என்று நடிகர் தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், கர்ணன் சீறும் கேள்விகளுடன் வருவான் என்று எதிர்பார்பைக் கூட்டியுள்ளார்.

Advertisment

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் நிலவும் சாதி பாகுபாகள், வன்முறைகள் குறித்து காத்திரமாக பேசிய பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றி டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விலும் கேள்விகள் கேட்கப்பட்டன.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் இருவரும் கர்ணன் படத்தில் இணைந்தனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கர்ணன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க…’ என்ற பாடலும் ‘பண்டாரத்தி புராணம்’ பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில், பண்டாரத்தி பாடல் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடுவதால், சர்ச்சையானதைத் தொடர்ந்து பண்டாரத்தி என்ற வார்த்தை மஞ்சணத்தி என்று மாற்றப்பட்டது.

இதையடுத்து, கர்ணன் படத்தின் டீசர் வெளியானது. தென் தமிழகத்தை கதைக் களமாகக் கொண்டு நடிப்பு அசுரன் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கர்ணன் திரைப்படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் படப்பிடிப்பு பணிகள் காரணமாக நடிகர் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், அவர் கர்ணன் படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கர்ணன், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான் என்று தனுஷ் கூறியிருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கர்ணன் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டதற்கும் கர்ணன் திரைப்படத்திற்கு தொடர்ந்து பெரும் ஆதரவு தந்து வரும் உங்கள் எல்லோருக்கும் நன்றி.

உங்களுடன் இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன், சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்த படத்துல இருக்காங்க. இந்த படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விஷயங்கள கத்துக்கொடுத்துச்சு.. மாரி செல்வராஜோட உறுதியும் அவரோட மனிதநேயமும் தினம் தினம் ஒரு சர்பிரைஸாக இருந்தது. ஒரு மனிதராக மாரி மாதிரி ஒரு நல்ல மனிதாராக இருக்க முடியுமானு நான் அடிக்கடி யோசிப்பேன். எனைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கைல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திட்டு இருக்கு.

என்னையும் நான் தேர்ந்தெடுக்குற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சார்க்கு என் நன்றி. அவர் என் மேல் வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை எனக்கு ஒரு நடிகனா இருக்கிறா பொறுபுகளை ஞாபகப்படுத்திட்டே இருக்கு.. இன்னும் அதிகமா உழக்கனும் அப்படிங்கற சக்திய கொடுத்துட்டே இருக்கு.

நம்ம மண்ணோட இசை வழியாகவும் அண்டஹ் மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ் கர்ணனுக்கு ஒரு யானை பலத்தை சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றிகள். எனக்கு நலம் விரும்பிகள் கம்மிதான். என்னுடைய உண்மையான நலம் விரும்பியாக இருந்ததுக்கு ரொம்ப நன்றி சந்தோஷ் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இடத்துல நான் மீனா சந்தோஷ் அவர்களுக்கும் என் நன்றிய சொல்லனும். அவங்கதான் எனக்கு மாரி செல்வராஜ அறிமுகப்படுத்தி வச்சாங்க.

நன்றி தேனி ஈஸ்வர் சார், உங்களோட பணியைப் பார்த்ஹ்டு எல்லொரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க. ஆல் தி பெஸ்ட் சார்.

கர்ணனோட மொத்ஹ்ட நடிகர் நடிகைகள் படக்குழுவினருக்கும் அவங்க அர்ப்பணிப்பு, அன்பு, ஆதரவு எல்லோத்துக்கும் நன்றி. இந்த படத்துக்காக உடல் ரீதியாக, எமோஷனலா என்னைவிட அதிகமான உழைப்பை அவன்க்க எல்லோருமே போட்டுருகாங்க. கரணன் இவ்ளோ நம்பகத்தன்மையோட அதெண்ட்டிக் ஆ இருக்கு. அப்படினா, அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால்தான்.

எனக்கு தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட பெஸ்ட்டா கொடுக்க எப்பொது முயற்சி பன்றேன். கர்ணன் உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லோருக்கும் மறுபடியும் நன்றி. கரணன் வருவான் சீறும் கேள்விகளை எந்தி வருவான். ஓம் நமசிவாய.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment