Advertisment

மீண்டும் இணையும் தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி!

தனுஷ் - செல்வா - யுவன் ஆகிய மூவரின் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhanush_Selvaraghavan_Yuvan_Shankar Raja

மீண்டும் இணையும் தனுஷ் - செல்வராகவன் - யுவன்

Dhanush - Selvaraghavan - Yuvan Shankar Raja: நடிகர் தனுஷ், அடுத்த மாதம் வெளியாகும் ‘அசுரன்’ பட வெளியீட்டில் தற்போது பிஸியாக உள்ளார். அதோடு இயக்குநர் துரை செந்தில் குமாரின் ‘பாட்டாஸ்’ திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். தவிர, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் தனுஷ், தனது சகோதரர் செல்வராகவனுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார். ’காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மற்றும் மயக்கம் என்ன” ஆகியப் படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக இவர்கள் இணைகிறார்கள். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. அதோடு இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் தனுஷ் - செல்வா - யுவன் ஆகிய மூவரின் ரசிகர்களுக்கும் இந்த விஷயம் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ இப்படத்தைத் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

தவிர, வெற்றிமாறனின் ’வட சென்னை 2’ படத்தில் தான் நடிப்பதை ‘அசுரன்’ ஆடியோ லாஞ்சில் தனுஷ் உறுதிப்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Dhanush Yuvan Shankar Raja Selvaraghavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment