/tamil-ie/media/media_files/uploads/2020/08/118129244_110582820667903_3054806337422403711_n.jpg)
Dhanush shares a cutest picture of his two sons : நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் தனுஷ் அக்கௌண்ட் வைத்திருந்தாலும் எப்போதும் சினிமா அப்டேட்களை தவிர குடும்ப உறவுகள் குறித்து எதையும் அதிகம் பகிர்வதில்லை.
இந்நிலையில் நேற்று மாலை தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் நின்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் “உங்களின் மூத்த மகன் உங்களை போன்றே வளர்ந்த பிறகு, உங்களின் உடையை அவருடையது கூறி வம்பளக்கும் போது” என்று கேப்சனில் குறிப்பிட்டிருந்தார். யாத்ரா நின்று கொண்டிருக்க, லிங்காவை முதுகில் சுமந்து கொண்டிருந்தார் தனுஷ்.
View this post on InstagramWhen your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga
A post shared by Dhanush (@dhanushkraja) on
இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். யாத்ராவை பார்த்தால் தனுஷின் தம்பியோ என்று தோன்றும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us