Advertisment

கடற்கரை நிலவு ஒளியில் ரொமான்ஸ்... தனுஷின் டிடி3 புதிய போஸ்டர் வைரல்

காதலர் தினத்தை முன்னிட்டு தான் இயக்கி வரும் 3-வது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dhanush DD3 Movie

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புதிய போஸ்டர்

தனுஷ் இயக்கத்தில் டிடி3 என்று அறிவிக்கப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் புதிய போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், அடுத்து தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக டி50 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மில்லர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷ் தற்போது தனது 3-வது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஸ்வாசம் புகழ் அனைகா சுரேந்தரன் மற்றும் பவிஷ் நடித்துள்ள இந்த படம் காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிடி3 என்று அறிவிக்கப்பட்டு படத்தின் டைட்டில் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் தம்பதிகள் கடற்கரையில் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி நிலவொளியில் அமர்ந்துள்ளனர். படத்தின் டேக்லைன் 'ஒரு வழக்கமான காதல் கதை' என்று கூறுகிறது.

போஸ்டரைப் பகிர்ந்துகொண்ட தனுஷ் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைகா மற்றும் பவிஷ் தவிர, படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், ரபியா கட்டூன், வெங்கடேஷ் மேனன் மற்றும் ரம்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.தனுஷின் ஹோம் பேனரான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.

தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ஒரு படத்திலும் பணிபுரிகிறார், இது சமீபத்தில் திருப்பதியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment