scorecardresearch

ஊட்டியில் தனுஷ் பாசத்தில் திளைக்கும் யாத்ரா: ஐஸ்வர்யா பிரிவுக்குப் பிறகு முதல் போட்டோ!

தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக மீண்டும் பெற்றோர்களாக இணைய முடிவு செய்துள்ளனர்.

Dhanush Yatra
Dhanush shares photo with his son yatra after separation from aishwarya

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்ததாக ஜனவரி மாதம் அறிவித்தனர். இது நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து, தனுஷ் தனது மூத்த மகன் யாத்ரா உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், தனுஷ் மலைப் பின்னணியில்’ சூரிய அஸ்தமனத்தில் யாத்ராவுடன் நேரத்தை செலவிடுவதைக் காணலாம். “இப்போது, ​​இதை நான் இதற்கு முன்பு எங்கே பார்த்தேன்? #யாத்ரதனுஷ் .. #நானேவருவேன்,” என்று தொடர்ச்சியான இதய ஈமோஜிகளுடன் அந்த பதிவில் தனுஷ் எழுதினார்.

செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பின் போது இருவரும் ஒருவரோடு ஒருவர் நேரத்தை செலவிட்ட போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இப்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் மற்றும் அவரது சகோதரர் செல்வராகவன் 4வது முறையாக இணையும் படம் இது. இருவரும் இதற்கு முன்பு காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர்.

தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் இரண்டு குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக மீண்டும் பெற்றோர்களாக இணைய முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும், தனுஷோ அல்லது ஐஸ்வர்யாவோ விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது பற்றியோ அல்லது பெற்றோருக்குரிய எதிர்காலத் திட்டங்களைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.

ஜனவரி 17 அன்று, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ 18 வருடங்கள் ஒன்றாக இருந்து’ பிரிந்ததாக அறிவித்தனர். இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இருப்பினும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார்.

தனுஷ் தனது வரவிருக்கும் படமான மாறனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி/சார், தி கிரே மேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களும் அவரிடம் உள்ளன.

அதே நேரம்’ ஐஸ்வர்யா சமீபத்தில் இந்தி-தமிழ் ரொமான்டிக் சிங்கிளான முசாஃபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார். காதலர் தினத்தன்று வீடியோவின் டீசர் வெளியிடப்பட்டது. முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் பேசிய அவர், “காதல் என்பது மிகவும் பொதுவான உணர்வு. நான் உருவாகும்போது, ​​அன்பின் வரையறை என்னுடன் உருவாகிறது. எது வந்தாலும் அதை நாம் தான் சமாளிக்க வேண்டும். கடைசியில் நமக்கு எது தேவையோ அது வந்து சேரும். காதலுக்கு 2வது வாய்ப்பு கொடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhanush shares photo with his son yatra after separation from aishwarya