/tamil-ie/media/media_files/uploads/2023/07/Dhanush-Kashthuri-Raja.jpg)
திருப்பதி கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நீண்ட தலைமுடியுடன் இருந்த நிலையில், தற்போது திருப்பதி கோவிலில் மொட்டை அடித்துக்கொண்டு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தயரான இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
#Dhanush sir with his family #tirupati today #CaptainMilIerpic.twitter.com/AADweHwFF2
— Chowdrey (@Chowdrey_) July 3, 2023
தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திடீரென தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற தனுஷ் மொட்டை அடித்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் பலரும் இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
#Dhanush pays a visit to #Thirupathi !
Drop a 🔥 for @dhanushkraja's latest look 👈🏼#DoseHigh#Dhanush#CaptainMillerpic.twitter.com/dBtZFkrtFl— Dose High (@DoseHighOffl) July 3, 2023
தற்போது வெளியாகியுள்ள தனுஷ் மொட்டை அடித்தது தொடர்பான வீடியோவில், அவரின் அப்பா, கஸ்தூரி ராஜா, அம்மா விஜயலட்சுமி ஆகியோருடன் அவரது மகன்களும் உள்ளனர். இதனிடையே இந்த மொட்டை அடித்த கெட்டப், அடுத்து தனது இயக்கி நடிக்க இருக்கும் தனது 50-வது படமான டி50 படத்திற்கான கெட்டப்பாக இருக்கலாம் வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகர் தனுஷ் திருப்பதியில் சாமி தரிசனம் !#CaptainMiller#Dhanush#CaptainMillerTeaser#Dhanushkraja#Tirupati#actor#tamilcinema#KollywoodCinima#CinemaCinema#gemtv#gemnews#TamilNadu#chennai#TamilNewspic.twitter.com/9XRAMJUgA6
— GEM TV (@GemTv7) July 3, 2023
இயக்குனர் தியாகரன் குமாரராஜாவின் உதவியாளரான அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய படமாக ராக்கி, மற்றும் சாணிகாகிதம் படங்களில் வைத்த வன்முறை காட்சிகளுக்காக பெயர் பெற்றவர். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். ஒரு பீரியட்-ஆக்ஷன் ட்ராமாவான இந்த படம், தனுஷின் சினிமா வாழ்க்கையில் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து இரு மகன்களுடன் மனமுருகி தரிசித்த நடிகர் தனுஷ்#Dhanush@dhanushkraja#CaptainMillerpic.twitter.com/JUuep1IEHV
— DhanushAppu (@DhanushAppuVK) July 3, 2023
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், உண்மை சம்பவங்களை மையப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், சுந்தீப் கிஷன், எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.