தனுஷ் இயக்கி நடித்த ராயன், டிரைவ் அவே டால்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், , தி பிராக் சீரியஸ் ஆகியவை இன்று பல்வேறு ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைமில் ராயன்
தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் 26-ம் தேதி வெளியான படம் ராயன். இதில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
டிரைவ் அவே டால்ஸ் (Drive Away Dolls) ஈதன் கோயன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியானது. மார்கரெட் குவாலி, ஜெரால்டின் விஸ்வநாதன், பீனி பெல்ட்ஸ்டீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
டேவ் செர்னின், ஜான் செர்னின் இயக்கத்தில் மேசன் தேம்ஸ், இசபெல்லா பெரீரா, லோரன் கிரே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் இன்கம்மிங். இந்த படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
மின்-சி செல், கிம் யூன்-சியோக், லீ ஜங்-யூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரியன் சீரிஸ் தி பிராக். இந்த சீரிஸின் முதல் எபிசோடு பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“