இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படம் : இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரின் கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரின் கேரக்டரில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Ilayaraja Dhanus

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்

ஆங்கிலத்தில் படிக்க : Dhanush to play Ilaiyaraaja in the music maestro’s biopic: reports

Advertisment

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படம் 2024ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025 இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இசைஞானி என்ற பெயரால் அழைக்கப்படும் இவர், தனது தனித்துவமாக இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும், இதில் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மூத்த பத்திரிகையாளர் லதா சீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரத்தியேக செய்தி: இசை மேஸ்ட்ரோ இளையராஜாவின் வாழக்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிப்பதை உறுதி செய்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவாக நடிக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் 2024-ல் தொடங்கி 2025-ல் வெளியாகும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

இந்தியாவின் இசை ஜாம்பவான்களில் ஒருவராக தனுஷ் நடிப்பதால் இந்த படம் மிகப்பெரிய திட்டமாக இருக்கும். இந்த படத்தை கனெக்ட் மீடியா தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.சில மாதங்களுக்கு முன்பு யுவன் ஷங்கர் ராஜா தனுஷ் தனது தந்தை இளையராஜாவாக நடிக்க விரும்புவதாகவும், இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதாகவும் கூறினார். தனுஷ் நடிக்கும் முதல் வாழ்க்கை வரலாற்று படம் இது

இந்த பாத்திரம் நிச்சயமாக அவருக்கு சில விருதுகளை பெற்றுத்தரும் என்று நான் நினைக்கிறேன். இசைஞானி இளையராஜா 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 7000க்கு மேற்ப்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரை வாழ்க்கையில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நிகழ்த்தினார். பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஐந்து தேசிய விருதுகளையும் பெற்றவர்.

லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு அவருக்கு மேஸ்ட்ரோஎன்ற பட்டத்தை வழங்கியது. சுவாரஸ்யமாக, மோகன்லாலின் பான்-இந்தியப் படமான வருஷபாவின் தயாரிப்பாளர் கனெக்ட் மீடியா. நான் கனெக்ட் மீடியாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை…” இந்த படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் என்ற தமிழ் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர், இப்படம் டிசம்பர் 15, 2023 அன்று வெளியிடப்படும். அடுத்து தனுஷ் சேகர் கம்முலாவின் படத்துடன் தற்காலிகமாக டி 51 என்று பெயரிடப்பட்ட ஒரு படத்திலும் நடிக்கிறார், மேலும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Isaignani Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: