scorecardresearch

தனுஷின் ‘வாத்தி’ படம்; முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வாத்தி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு 60% அதிகரித்துள்ளது

தனுஷின் ‘வாத்தி’ படம்; முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
வாத்தி படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா

தனுஷின் வாத்தி படம் முதல் நாளில் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘வாத்தி’ நேற்று, பிப்ரவரி 17 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்தார், சமுத்திரக்கனி வில்லனாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: நல்லாசிரியராக சமுதாயத்தை மாற்றினாரா தனுஷ்? ‘வாத்தி’ விமர்சனம்

கல்வி வியாபாரம் குறித்து பேசும் வாத்தி படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் நடிகர் தனுஷ் இப்படத்தில் ஆசிரியராக நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். தனுஷ் நடிப்பில் நாளுக்கு நாள் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீரியட் படமான வாத்தியில் இந்தியக் கல்வி அமைப்பில் உள்ள அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடும் கணித ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார்.

தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வெளியான இப்படம், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.14 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படம் மொத்தம் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வார இறுதியில் மேலும் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, நேற்று திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு 60% அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில், ‘வாத்தி’ ஒரு பிளாக்பஸ்டர் படம் என்று படத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhanush vaathi movie first day box office collection in tamil

Best of Express