/tamil-ie/media/media_files/uploads/2018/03/3-15.jpg)
நடிகர் தனுஷ் நடிப்பில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கலர்ஃபுப் ஸ்டில்ஸ் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
வடசென்னையை மூன்று விதத்தில் காட்ட முடிவெடுத்த வெற்றிமாறன், அதை மூன்று பாகங்களாக இயக்கவுள்ளார். வடசென்னையின் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது வெளியாகியுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில், தனுஷ் அன்பு என்ற கேரம் விளையாட்டு வீரராக நடித்துள்ளார். அன்பு தனது 25 வருட வாழ்க்கையில் சந்தித்த நபர்கள், காதல், நண்பர்கள், மோதல், என அவரின் வாழ்க்கையை குறித்து பேசும் படம் தான் இந்த வடசென்னை.
வடசென்னை தான் படத்தின் கதைக்களம். அவர்களின் வாழ்க்கையை , தினசரி செயலையும் எவ்வளவும் வண்ணமாக காட்ட முடியோமோ அவ்வளவும் நிறத்தில் காட்டியுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று(8.3.18) காலை இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகியது. மீண்டும் ஒரு மெட்ராஸையும், புதுப்பேட்டையை தமிழ் சினிமாவில் விரைவில் காண இருப்பதாக தனுஷின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.