/indian-express-tamil/media/media_files/4iwsOLodIJgzN90H0Aot.jpg)
தனுஷ் மகன்கள் மற்றும் அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் மகன்கள் மற்றும் அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்துடன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படம். இந்த சூழலில், நடிகர் தனுஷ், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அமைந்திருக்கும் தந்தையின் குலதெய்வம் கோயிலான கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவிலில் தனது 2 மகன்கள் மற்றும் அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தாயாரின் குலதெய்வம் கோயிலான கருப்புசாமி கோவிலுக்கு சென்ற தனுஷ் அவரது இருமகன்கள், அவரது தந்தைகஸ்தூரிராஜா மற்றும் தாயார், அண்ணன் இயக்குனர் செல்வராகவன், 2 சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.
இங்கு பரந்து கிடக்கும் பூமி,
— Dhanush (@dhanushkraja) July 23, 2024
உனக்கும் தந்ததைய்யா,
இங்கு
இருக்கும் அத்தனை சாமியும்,
உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace 🤍 pic.twitter.com/sjgM0cwbbh
குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்டது குறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் “இங்கு பரந்து கிடக்கும் பூமி,
உனக்கும் தந்ததைய்யா,
இங்கு இருக்கும் அத்தனை சாமியும்,
உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace” என்று பதிவிட்டுள்ளர்.
ராயன் படம் ரிலீசைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.