தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தனுஷ் எவ்வித பதில் அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனாலும் அவரது அப்பா கஸ்தூரி ராஜா இது குறித்து தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
Read In English: Dhanush’s father Kasthuri Raja tears into Nayanthara, dubs her claims as false: ‘No time to answer those who talk about us behind our backs’
தமிழ் சினிமாவில், நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற படத்தை தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்த நிலையில், விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.
தொடர்ந்து இவர்கள் தங்கள் காதலை வளர்த்துக்கொண்ட நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் மட்டும் அழைக்கப்பட்ட நிலையில், நெட்ஃபிளக்ஸ் நிறுவனம் இந்த திருமணத்தை டெலிகாஸ்ட் செய்யும் உரிமையை வாங்கியிருந்தது. ஆனால் திருமணத்தில் போதிய அளவு காட்சிகள் கிடைக்காததால், நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது விக்கி – நயன் எடுத்த காட்சிகளை திருமண ஆவணப்படத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த காட்சிகளுக்கு என்.ஓ.சி கொடுக்காத படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் இருவரின் ரசிகர்களும் தங்களது நட்சத்திரத்திற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால் இது குறித்து தனுஷ் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா, படத்தின் காட்சிகளை பொய்யாகப் பயன்படுத்த, தடையில்லாச் சான்றிதழுக்காக (என்ஓசி) தனுஷை துரத்தினேன் என்ற நயன்தாராவின் பேச்சு, முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களுக்கு பதிலளிக்க தனக்கும் தனது மகனுக்கும் நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
“வேலை எங்களுக்கு முக்கியம். நாங்கள் முன்னால் ஓடுகிறோம். நம்மைத் துரத்துபவர்களுக்கும், நம்மைப் பற்றிப் பேசுபவர்களுக்கும் பதில் சொல்ல நேரமில்லை. என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறான். நயன்தாரா கூறியது போல் இரண்டு வருடங்கள் காத்திருப்பது உண்மை தகவல் அல்ல. நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் போர்ட்ரல் சமயம் செய்தி வெளியிட்டுள்ளது.
நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தனுஷ் தன் மீதும் விக்னேஷ் சிவன் மீதும் தனிப்பட்ட வெறுப்பை வைத்துள்ளார். அவர் தனது நெட்ஃபிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேலில் நானும் ரவுடி தானின் மூன்று வினாடி கிளிப்பைப் பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த கடிதத்திற்கு தனுஷ் இதுவரை பதில் அளிக்காத நிலையில், நயன்தாராவின் 40வது பிறந்தநாளை ஒட்டி கடந்த நவம்பர் 18 அன்று இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.