முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவுள்ள தர்ம பிரபு நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார் பி.ரங்கநாதன். முத்துகுமரன் இயக்கத் தயாராக இருக்கும், தர்ம பிரபு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.
தர்ம பிரபு தேர்தலில் போட்டியிடும் யோகி பாபு
எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார், தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே தர்மபிரபு படத்தின் கதையாகும்.
November 2018
இதற்காக சென்னையிலுள்ள ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறது. இதர நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முழுக்க சென்னையில் பிரதான காட்சிகளை படமாக்கிவிட்டு, வெளிநாட்டில் பாடல்களை படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக மகேஸ் முத்துசாமி, எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்