/tamil-ie/media/media_files/uploads/2019/06/Dharmaprabhu-leaked-tamilrockers.jpg)
Dharmaprabhu Full Movie Leaked in Tamilrockers for Free Download: நடிகர் யோகி பாபு எமன் வேடத்தில் நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் நேற்று வெளியானது.
அறிமுக இயக்குனர் முத்துக்குமரன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வசனங்களை, யோகி பாபுவும் இணைந்து எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்து உள்ளார். எடிட்டிங் பணிகளை கே,எல். பிரவீன் செய்துள்ளார்.
ராதாரவி, ரேகா, மனோபாலா, அழகம் பெருமாள், சிறப்புத் தோற்றத்தில் ஜனனி ஐயர் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். ராக்லைன் தயாரிப்பு நிறுவனம் தர்மபிரபு படத்தைத் தயாரித்துள்ளது.
சமூகத்தில் தற்போது நடக்கும் ஆணவக்கொலைகள், காதலுக்கு எதிரான மனப்போக்கு, ஜாதி அரசியல், ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை என சில பெண்கள் செய்யும் சகிக்க முடியாத செயல்கள் என பல விஷயங்கள், படத்தில் இடம் பெற்றிருந்தாலும், பார்ப்பவர்களை சோதிக்கும்படி திரைக்கதை இருப்பதாக ரசிகர்கள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில், தர்மபிரபு படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் லீக் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.