மழையில் சொட்ட சொட்ட நனைந்த தர்ஷா குப்தா; ரசிகர்களை கிறங்கடிக்கும் வைரல் போட்டோஸ்

சாரல் மழையில் நனைந்தவாறு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தர்ஷா குப்தா; அழகை வர்ணித்து கமெண்ட்களை பதிவிடும் ரசிகர்கள்

சாரல் மழையில் நனைந்தவாறு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தர்ஷா குப்தா; அழகை வர்ணித்து கமெண்ட்களை பதிவிடும் ரசிகர்கள்

author-image
WebDesk
New Update
dharsha gupta

சாரல் மழையில் நனைந்தவாறு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தர்ஷா குப்தா; அழகை வர்ணித்து கமெண்ட்களை பதிவிடும் ரசிகர்கள் (புகைப்படங்கள்: இன்ஸ்டாகிராம்)

நடிகை தர்ஷா குப்தா சாரல் மழையில் சொட்ட சொட்ட நனைந்தவாறு இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Advertisment

சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா வெள்ளித்திரையில் பெரிய ஹீரோயினாக முயற்சித்து வருகிறார். சின்ன சின்ன விளம்பரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த தர்ஷா குப்தா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்தார்.

Advertisment
Advertisements

பின்னர், மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குக் வித் கோமாளி மூலம் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தநிலையில், தர்ஷா குப்தா தனது வெள்ளித்திரை கனவை நோக்கி முன்னேறினார். தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இதற்கிடையில் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்கள் மனதில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தாவுக்கு 2 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாரல் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dharsha Gupta

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: