தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாவது பாகமான தில்லுக்கு துட்டு 2 படம் திரைக்கு வர தயாராகி உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாக பூஜை போடப்பட்ட படம் தற்பொழுது பல தடைகளை தாண்டி ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது.
தில்லுக்கு துட்டு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிப்ரவரி மாதம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவர இருக்கும் வேளையில் அதற்கு சரிசமமாக வெளியாகிறது தில்லுக்கு துட்டு 2ம் பாகம். இப்படம், பிப்ரவரி தேதி படம் வெளியாகும் என நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் பாகம் போலவே இந்த பாகமும் காமெடியிலும், திகிலிலும் நம்மை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The most awaited .@iamsanthanam Starring #DhillukuDhuddu2FromFeb7#DD2CensoredUA @tridentartsoffl @BhalaRb @sshritha9 @ShabirMusic @SoundharyaRavi1 @shiyamjack @johnsoncinepro @rajnarayanan11 @thinkmusicindia pic.twitter.com/xV8P3n5Vtq
— Santhanam (@iamsanthanam) 30 January 2019
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஷ்ரித்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பேய்களுடன் சந்தானம் அடிக்கும் கலக்கல் காமெடிக்காக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது. படத்தின் பஞ்ச டயலாக்கில் சுப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் தல அஜித் குமாரின் விஸ்வாசம் படங்களில் பஞ்ச வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை இயக்கிய ராம் பாலா இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.