'தில்லுக்கு துட்டு' இரண்டாம் பாகம் ஆரம்பம்!

தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கியது

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் சந்தானம் நடித்து வெளியான படம் தில்லுக்கு துட்டு. ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இப்படத்தை இயக்கியிருந்தார். வழக்கமான ஹாரர் காமெடி படமாக இருந்தாலும்,  சந்தானத்திற்கு இப்படம் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதனை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பிளாக்பஸ்டர் டீமுடன் மீண்டும் இணைவதில் மகிழ்கிறேன். எங்கும் பாசிட்டிவ் வைப்ரேஷனை உணர்கிறேன். நீண்ட முதல் ஷெட்யூல் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. எங்களது அடுத்த வெற்றி படைப்புக்கு உங்களது ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன்” என்று தனது ட்விட்டரில் சந்தானம் குறிப்பிட்டுள்ளார்.

சந்தானம் நடித்து கடைசியாக வந்த ‘சக்க போடு போடு ராஜா’படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.’சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை! செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும்‘மன்னவன் வந்தானடி’படமும் பாதியில் நிற்கிறது.

இதனால், வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சந்தானம், மீண்டும் தில்லுக்கு துட்டு டீமுடன் களமிறங்கியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close