Santhanam-Shritha Sivadas Starrer Dhilluku Dhuddu 2 Review : நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 படம் தமிழகம் முழுவதும் இன்று 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார்.
Dhilluku Dhuddu 2 Review : தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்
இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.


‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் இன்று சுமார் 375க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று வெளியானது.
இப்படத்தை பார்த்து வரும் மக்கள், லொல்லு சபாவில் இருக்கும் அதே சந்தானம் இன்றும் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளனர். மேலும், முதல் பாதியே திகிலை மறந்து சிரிக்க வைக்கிறது என்றும் இரண்டாவது பாகத்திற்கு காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
படம் பார்த்த பொதுமக்களில் ஒருவரான பவித்ரன், “வேற லெவல். பல காட்சிகளில் கவுண்டர் அடிப்பது நன்றாக இருக்கிறது. இண்டர்வல் முன் மற்றும் பின் என இரண்டிலுமே தரமான காமெடி இருக்கிறது. முதல் பாகம் படத்தை விட இரண்டாம் பாகம் படம் ரொம்ப பிடித்திருக்கிறது. நிச்சயம் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
முழு விமர்சனம் விரைவில்...