Dhilluku Dhuddu 2 Teaser 02 : சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரை வரை பலரையும் சிரிப்பால் வயிறு புண்ணாக வைத்த நடிகர் சந்தானம் நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் ரிலீஸ்.
Advertisment
சந்தானம் – அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.
Dhilluku Dhuddu 2 Teaser : தில்லுக்கு துட்டு 2 படம் இரண்டாம் டீசர் ரிலீஸ்
இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் 2வது டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘கொல காண்டுல இருக்கேன்’ வசனத்தையும், விஸ்வாசம் படத்தில் அஜித் பேசும், ‘பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா’ வசனத்தையும் மாற்றி எழுதி நம்மை சிரிக்க வைக்கின்றனர்.